Gold Rate Chennai: ரூ.560 குறைந்தது தங்கம் விலை - தொடருமா சரிவுப் போக்கு?
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.560 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.20 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
ஆபரணத் தங்கம் விலை வெகுவாக குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15,010 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,20,080 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16,375 ஆகவும், சவரன் விலை ரூ.1,31,000 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.560 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.20 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (27.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.14,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.1,19,520 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 குறைந்து ரூ.16,298 ஆகவும், சவரன் விலை ரூ.616 குறைந்து ரூ.1,30,384 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,65,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.42 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு இப்போது மீண்டும் குறைந்து வருவதால், ஆபரணத் தங்க விலை மேலும் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,940 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,520 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,298 (ரூ.77 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,386 (ரூ.616 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,940 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,520 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,298 (ரூ.77 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,386 (ரூ.616 குறைவு)
Edited by Induja Raghunathan

