Gold Rate Chennai: சற்றே குறைந்த தங்கம் விலை - விடாமல் எகிறும் வெள்ளி!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.240 குறைந்தது. எனினும், சவரன் விலை ரூ.94,000-க்கும் மேலாகவே நீடிக்கிறது. அதேவேளையில், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கடந்த இரு தினங்களாக ரூ.2000-க்கும் மேலாக உயர்ந்த ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது, நகை வாங்குவோருக்கு ஆறுதல் தந்துள்ளது. எனினும், வெள்ளி விலை கிடுகிடுவென எகிறியிருக்கிறது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.11,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.94,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.12,873 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.1,02,984 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.240 குறைந்தது. எனினும், சவரன் விலை ரூ.94,000-க்கும் மேலாகவே நீடிக்கிறது. அதேவேளையில், வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (27.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.11,770 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.94,160 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.12,840 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.1,02,720 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 உயர்ந்து ரூ.180 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 உயர்ந்து ரூ.1,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.24 ஆக உள்ளது. எனினும், பங்குச் சந்தைகள் மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளதால், தங்கம் மீதான முதலீடு சற்றே குறைந்து, ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,770 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.94,160 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,840 (ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,720 (ரூ.696 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,770 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.94,160 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,840 (ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,720 (ரூ.696 உயர்வு)
Edited by Induja Raghunathan

