Gold Rate Chennai: எகிறிய வேகத்தில் சரிந்த தங்கம் விலை ரூ.1,360 குறைவு!
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,360 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்துக்கு கீழாக உள்ளது, வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
இரு தினங்களாக கடுமையாக உயர்ந்த ஆபரணத் தங்கம் விலை வாரத்தில் இறுதி நாளான இன்று வெகுவாக குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.14,360 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.130 உயர்ந்து ரூ.15,665 ஆகவும், சவரன் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.1,25,320 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,360 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்துக்கு கீழாக உள்ளது, வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (5.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.170 குறைந்து ரூ.14,190 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.185 குறைந்து ரூ.15,535 ஆகவும், சவரன் விலை ரூ.1,480 குறைந்து ரூ.1,24,280 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,55,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.49 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீட்டில் இறங்குமுகம் நிலவுவதால், ஆபரணத் தங்க விலையும் சரிந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,190 (ரூ.170 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,520 (ரூ.1,360 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,335 (ரூ.185 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,280 (ரூ.1,480 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,190 (ரூ.170 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,520 (ரூ.1,360 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,335 (ரூ.185 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,280 (ரூ.1,480 குறைவு)
Edited by Induja Raghunathan

