Gold Rate Chennai: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை; சவரனுக்கு இவ்வளவு குறைவா?
தங்கம் விலை இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (20/04/2023)
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று யாருமே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஏறிய வேகத்தில் தங்கம் விலை சரிந்தது நடுத்தர குடும்பத்தினருக்கு சற்றே நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,665 ரூபாய்க்கும், சவரன் 45,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 5,650 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 45,200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6,060 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 48,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையே நீடித்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 81 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 81 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைக்கக் காரணமாக அமைந்துள்ளது. மற்றொருபுறம் டாலர் குறியீட்டு எண் 101-க்கு மேல் உயர்ந்துள்ளதும், தங்கத்தின் மீது பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கத்தின் விலை 0.11 சதவீதம் சரிந்து ரூ.60,222 ஆகவும், வெள்ளியின் விலை 0.3 சதவீதம் சரிந்து 75,249 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,650 (மாற்றம்: ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,200 (மாற்றம்: ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,060 (மாற்றம்: ரூ.15 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,480 (மாற்றம்: ரூ.120 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,585 (மாற்றம்: ரூ.20 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,680 (மாற்றம்: ரூ.160 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,093 (மாற்றம்: ரூ.22 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,744 (மாற்றம்: ரூ.176 குறைவு)

