Gold Rate Chennai: ரூ.93,000-க்கு கீழாக குறைந்தது தங்கம் விலை - ஏற்றத்தில் வெள்ளி!
ஆபரணத் தங்கம் விலை வெகுவாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800 ஆக உள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு சற்றே ஆறுதல் தருவதாக உள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.220 உயர்ந்து ரூ.11,700 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.240 உயர்ந்து ரூ.12,524 ஆகவும், சவரன் விலை ரூ.1,920 உயர்ந்து ரூ.1,02,112 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை வெகுவாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800 ஆக உள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் தங்க நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (12.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.11,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.92,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.108 குறைந்து ரூ.12,656 ஆகவும், சவரன் விலை ரூ.864 குறைந்து ரூ.1,01,248 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (12.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.173 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,73,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.57 ஆக சற்றே மீண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடும் சற்றே குறைந்ததால் ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,600 (ரூ.100 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,800 (ரூ.800 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,656 (ரூ.108 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,01,248 (ரூ.864 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,600 (ரூ.100 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,800 (ரூ.800 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,656 (ரூ.108 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,01,248 (ரூ.864 குறைவு)
Edited by Induja Raghunathan

