Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே உயர்வு - சைலைன்ட் மோடில் வெள்ளி!
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.200 உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்தை கடந்துள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் ஏதுமில்லை.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. எனினும், பெரிய அளவில் ஏற்றம் அடையாதது நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.14,433 ஆகவும், சவரன் விலை ரூ.656 உயர்ந்து ரூ.1,15,464 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.200 உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்தை கடந்துள்ளது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (31.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.13,255 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 உயர்ந்து ரூ.14,460 ஆகவும், சவரன் விலை ரூ.216 உயர்ந்து ரூ.1,15,680 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (31.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.37 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,255 (ரூ.25 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,040 (ரூ.200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,460 (ரூ.27 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,680 (ரூ.216 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,255 (ரூ.25 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,040 (ரூ.200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,460 (ரூ.27 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,680 (ரூ.216 உயர்வு)
Edited by Induja Raghunathan

