Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே உயர்ந்து ரூ.1.13 லட்சத்துக்கு விற்பனை!
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.120 மட்டும் உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.13 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
ஆபரணத் தங்கம் விலை இன்று பெரிய அளவில் மாற்றம் காணாதது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வரும் சூழலில், சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,155 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,13,240 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,442 ஆகவும், சவரன் விலை ரூ.1,23,536 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.120 மட்டும் உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.13 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (12.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.14,170 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.15,458 ஆகவும், சவரன் விலை ரூ.128 உயர்ந்து ரூ.1,23,664 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,50,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.60 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீட்டில் பெரிதாக மாற்றம் இல்லை என்பது கவனிகக்த்தக்கது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,170 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,360 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,458 (ரூ.16 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,664 (ரூ.128 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,170 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,360 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,458 (ரூ.16 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,664 (ரூ.128 உயர்வு)
Edited by Induja Raghunathan

