Gold Rate Chennai: மீண்டும் அதிரடி உயர்வுடன் ரூ.91,000-ஐ தாண்டிய தங்கம் விலை!
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்ந்துள்ளது. சவரன் விலை ரூ.91,000-ஐ மீண்டும் தாண்டிவிட்டது. வெள்ளி விலையும் சற்றே அதிகரித்துள்ளது.
வாரத்தின் தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து ரூ.91,000-ஐ தாண்டியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.11,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.90,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.12,328 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.98,624 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்ந்துள்ளது. சவரன் விலை ரூ.91,000-ஐ மீண்டும் தாண்டிவிட்டது. வெள்ளி விலையும் சற்றே அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தங்க நகை வாங்கலாம். எனினும், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (10.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.11,410 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.880 உயர்ந்து ரூ.91,380 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.12,448 ஆகவும், சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.99,584 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (10.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.167 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,67,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.68 ஆக உள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதால், ஆபரணத் தங்கம் விலையிலும் வெகுவாக மாற்றம் ஏற்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,300 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,400 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,328 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,624 (ரூ.264 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,300 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,400 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,328 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,624 (ரூ.264 உயர்வு)
Edited by Induja Raghunathan

