Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் உயர்ந்து ரூ.1.11 லட்சத்தை நெருங்கியது!
ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.3,000 அதிகரித்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.11 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றம் கண்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.300 உயர்ந்து ரூ.13,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,400 உயர்ந்து ரூ.1,10,400 ஆகவும் ஆனது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.328 உயர்ந்து ரூ.15,055 ஆகவும், சவரன் விலை ரூ.2,624 உயர்ந்து ரூ.1,20,440 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.3,000 அதிகரித்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.11 லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (13.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.13,860 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து ரூ.15,120 ஆகவும், சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.1,20,960 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (13.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.17 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,860 (ரூ.60 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,880 (ரூ.480 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,120 (ரூ.65 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,960 (ரூ.520 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,860 (ரூ.60 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,880 (ரூ.480 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,120 (ரூ.65 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,960 (ரூ.520 உயர்வு)
Edited by Induja Raghunathan

