Gold Rate Chennai: தங்கம் விலை இரு நாளில் மட்டும் ரூ.3,000+ அதிகரிப்பு!
ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.3,000-க்கும் மேலாக அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.15 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
ஆபரணத் தங்கம் விலை இரண்டாவது நாளாக வெகுவாக ஏற்றம் கண்டிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.290 உயர்ந்து ரூ.14,240 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.317 உயர்ந்து ரூ.15,535 ஆகவும், சவரன் விலை ரூ.2,536 உயர்ந்து ரூ.1,24,280 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.3,000-க்கும் மேலாக அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.15 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (4.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.14,360 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.130 உயர்ந்து ரூ.15,665 ஆகவும், சவரன் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.1,25,320 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,55,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.50 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீட்டில் ஏற்றம் நிலவுவதால், ஆபரணத் தங்க விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,360 (ரூ.120 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,880 (ரூ.960 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,665 (ரூ.130 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,25,320 (ரூ.1,040 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,360 (ரூ.120 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,880 (ரூ.960 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,665 (ரூ.130 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,25,320 (ரூ.1,040 உயர்வு)
Edited by Induja Raghunathan

