Gold Rate Chennai: மக்களுக்கு தொடரும் ஷாக் - தங்கம் விலை ரூ.1,040 அதிகரிப்பு!
ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.2,200 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்தை தாண்டிவிட்டது. வெள்ளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது.
ஆபரணத் தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் அதிரடியாக ஏற்றம் கண்டிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.145 உயர்ந்து ரூ.14,155 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.158 உயர்ந்து ரூ.15,442 ஆகவும், சவரன் விலை ரூ.1,264 உயர்ந்து ரூ.1,23,536 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.2,200 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்தை தாண்டிவிட்டது. வெள்ளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (19.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 உயர்ந்து ரூ.14,285 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 உயர்ந்து ரூ.15,584 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 உயர்ந்து ரூ.1,24,672 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.99 ஆக உள்ளது. ஈரான் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இவற்றின் தாக்கத்தால் சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் ஆபரணத் தங்கம் விலையும் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,285 (ரூ.130 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,280 (ரூ.1,040 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,584 (ரூ.142 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,672 (ரூ.1,136 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,285 (ரூ.130 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,280 (ரூ.1,040 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,584 (ரூ.142 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,672 (ரூ.1,136 உயர்வு)
Edited by Induja Raghunathan

