Gold Rate Chennai: சரிந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை ரூ.1,120 உயர்வு!
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்தை கடந்துவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
கடந்த இரு வர்த்தக தினங்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வெகுவாக அதிகரித்தது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.14,130 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,13,040 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.15,415 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,23,320 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்தை கடந்துவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (8.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.152 உயர்ந்து ரூ.15,567 ஆகவும், சவரன் விலை ரூ.1,216 உயர்ந்து ரூ.1,24,536 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,55,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.49 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பால், ஆபரணத் தங்க விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,270 (ரூ.140 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,160 (ரூ.1,120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,567 (ரூ.152 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,536 (ரூ1,216 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,270 (ரூ.140 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,160 (ரூ.1,120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,567 (ரூ.152 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,536 (ரூ1,216 உயர்வு)
Edited by Induja Raghunathan

