Gold Rate Chennai: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,200 உயர்ந்தது. சவரன் விலை ரூ.1.07 லட்சத்தை தாண்டியுள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது.
ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது நகை வாங்க விழைவோருக்கு கலக்கம் அளித்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை காலையில் குறைந்த தங்கம் விலை பின்னர் மாலையில் உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,06,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,455 ஆகவும், சவரன் விலை ரூ.1,15,640 ஆகவும் விற்பனை ஆகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,200 உயர்ந்தது. சவரன் விலை ரூ.1.07 லட்சத்தை தாண்டியுள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (2.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.13,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.163 உயர்ந்து ரூ.14,618 ஆகவும், சவரன் விலை ரூ.1,304 உயர்ந்து ரூ.1,16,944 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (2.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,50,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.95 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,400 (ரூ.150 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,07,200 (ரூ.1,200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,618 (ரூ.163 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,944 (ரூ.1,304 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,400 (ரூ.150 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,07,200 (ரூ.1,200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,618 (ரூ.163 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,944 (ரூ.1,304 உயர்வு)
Edited by Induja Raghunathan

