Gold Rate Chennai: மீண்டும் ஜெட் வேகம்; தங்கம் விலை ரூ.1,600 அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி தந்த தங்கம்!
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதால், ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
வாரத்தின் தொடக்க நாளான நேற்று ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் ஜெட் வேகம் எடுத்து சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்தது, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.110 குறைந்து ரூ.11,520 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.880 குறைந்து ரூ.92,160 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.121 குறைந்து ரூ.12,567 ஆகவும், சவரன் விலை ரூ.968 குறைந்து ரூ.1,00,536 ஆகவும் விற்பனை ஆனது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதால், ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (25.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.11,720 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.93,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.219 உயர்ந்து ரூ.12,786 ஆகவும், சவரன் விலை ரூ.1,752 உயர்ந்து ரூ.1,02,288 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (25.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.174 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,73,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.21 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியுடன் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், ஆபரணத் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,720 (ரூ.200 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.93,760 (ரூ.1,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,786 (ரூ.219 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,288 (ரூ.1,752 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,720 (ரூ.200 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.93,760 (ரூ.1,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,786 (ரூ.219 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,288 (ரூ.1,752 உயர்வு)
Edited by Induja Raghunathan

