Gold Rate Chennai: தங்கம் விலை 2-வது நாளாக ரூ.2,000+ அதிகரித்து அதிர்ச்சி!
ஆபரணத் தங்கம் இரு தினங்களில் மட்டும் ரூ.4,500 அளவில் அதிகரித்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.10 லட்சத்தை தொட்டுவிட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது.
தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் ரூ.2,000-க்கும் மேலாக அதிகரித்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் நேற்று இரு முறை மாற்றம் கண்ட தங்கம் விலை ரூ.2,240 உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,480 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,07.840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,705 ஆகவும், சவரன் விலை ரூ.1,17,640 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் இரு தினங்களில் மட்டும் ரூ.4,500 அளவில் அதிகரித்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.10 லட்சத்தை தொட்டுவிட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (6.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.270 உயர்ந்து ரூ.13,750 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.295 உயர்ந்து ரூ.15,000 ஆகவும், சவரன் விலை ரூ.2,360 உயர்ந்து ரூ.1,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (6.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.12 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் சற்று தணிந்துள்ளதும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,750 (ரூ.270 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,000 (ரூ.2,160 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,000 (ரூ.295 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,000 (ரூ.2,360 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,750 (ரூ.270 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,000 (ரூ.2,160 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,000 (ரூ.295 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,000 (ரூ.2,360 உயர்வு)
Edited by Induja Raghunathan

