Gold Rate Chennai: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இனி ஏறுமுகம் தானா?
கடந்த சில தினங்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று மாலையும் இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.07 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
கடந்த 4 நான்கு நாட்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்தது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கம் அளித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை காலையில் சரிந்த தங்கம் விலை பின்னர் மாலையில் உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,320 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,06,560 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,531 ஆகவும், சவரன் விலை ரூ.1,16,248 ஆகவும் விற்பனை ஆனது.
கடந்த சில தினங்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று மாலையும் இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.07 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (10.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,350 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.14,564 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,16,512 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (10.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.32 ஆக உள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தங்கம் விலையில் இனி பெரிய அளவில் மாற்றம் வரலாம் என கணிக்கப்படுகிறது. அடுத்தடுத்த சர்வதேச சூழல்களைப் பொறுத்து, தங்கம் விலை இனி ஏறுமுகம் காண வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,350 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,800 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,564 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,512 (ரூ.240 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,350 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,800 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,564 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,512 (ரூ.240 உயர்வு)
Edited by Induja Raghunathan

