Gold Rate Chennai: தங்கம் விலை ரூ.280 உயர்வு - வெள்ளியில் மாற்றமில்லை
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.280 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.05 லட்சத்தை தாண்டியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.280 உயர்ந்துள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லாதது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.13,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,04,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 குறைந்து ரூ.14,291 ஆகவும், சவரன் விலை ரூ.432 குறைந்து ரூ.1,14,328 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.280 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.05 லட்சத்தை தாண்டியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (18.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.13,135 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 குறைந்து ரூ.14,329 ஆகவும், சவரன் விலை ரூ.304 உயர்ந்து ரூ.1,14,632 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (18.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,35,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.53 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,135 (ரூ.35 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,080 (ரூ.280 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,329 (ரூ.38 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,632 (ரூ.304 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,135 (ரூ.35 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,080 (ரூ.280 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,329 (ரூ.38 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,632 (ரூ.304 உயர்வு)
Edited by Induja Raghunathan

