Gold Rate Chennai: அடங்காத தங்கம் விலை - 5 நாளில் ரூ.5,000+ அதிகரிப்பு
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.800 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.20 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
அடங்காத தங்கம் விலை வாரத்தின் கடைசி நாளான இன்றும் அதிகரித்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.5,000-க்கும் மேலாக அதிகரித்துப்பது கவனிக்கத்தக்கது.
சென்னையில் வெள்ளிக்கிழமை இருமுறை உயர்ந்த தங்கம் விலை ரூ.2,000 அதிகரித்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,850 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,18,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16,200 ஆகவும், சவரன் விலை ரூ.1,29,600 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.800 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.20 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (22.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.14,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 உயர்ந்து ரூ.16,309 ஆகவும், சவரன் விலை ரூ.848 உயர்ந்து ரூ.1,30,472 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,70,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.70 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு உயர்வதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,850 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,600 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,309 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,472 (ரூ.848 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,850 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,600 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,309 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,472 (ரூ.848 உயர்வு)
Edited by Induja Raghunathan

