Gold Rate Chennai: தங்கம் விலை ரூ.560 அதிகரிப்பு; வெள்ளியும் ஏற்றம்!
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.560 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு மேலாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.520 உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.13,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,05,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.14,345 ஆகவும், சவரன் விலை ரூ.128 உயர்ந்து ரூ.1,14,760 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.560 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு மேலாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (21.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.14,422 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.1,15,376 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (21.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,40,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.32 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,220 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,760 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,422 (ரூ.77 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,376 (ரூ.616 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,220 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,760 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,422 (ரூ.77 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,376 (ரூ.616 உயர்வு)
Edited by Induja Raghunathan

