Gold Rate Chennai: மீண்டும் ஏறுமுகம் காணும் தங்கம் விலை ரூ.560 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1.07 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு சற்று கவலை அளித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,06,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,509 ஆகவும், சவரன் விலை ரூ.1,16,072 ஆகவும் விற்பனை ஆனது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1.07 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (27.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,370 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.14,585 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.1,16,680 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.36 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் உறுதியான நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,370 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,960 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,585 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,680 (ரூ.608 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,370 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,960 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,585 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,680 (ரூ.608 உயர்வு)
Edited by Induja Raghunathan

