Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - குறைந்தது வெள்ளி விலை...
ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் ஏறுமுகம் கண்டு ரூ.240 உயர்ந்தது தற்போது சவரன் விலை ரூ.1.12 லட்சத்துக்கு மேலாகவே நீடிக்கிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.
ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் ஏறுமுகம் கண்டது. இது, நகை வாங்க விழைவோருக்கு சற்று கலக்கத்தை தந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.14,030 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.1,12,240 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.15,305 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.1,22,440 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் ஏறுமுகம் கண்டு ரூ.240 உயர்ந்தது தற்போது சவரன் விலை ரூ.1.12 லட்சத்துக்கு மேலாகவே நீடிக்கிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (18.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,060 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,12,480 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.15,338 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,22,704 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (18.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.47 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியான நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,060 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,480 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,338 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,704 (ரூ.264 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,060 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,480 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,338 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,704 (ரூ.264 உயர்வு)
Edited by Induja Raghunathan

