Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே உயர்வு - மீண்டும் ஆட்டம் ஆரம்பம்?
கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கம் விலை ரூ.4,000 அளவுக்கு குறைந்த நிலையில், இப்போதும் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் கடும் சரிவு தொடர்கிறது.
கிடுகிடுவென ஏறிய ஆபரணத் தங்கம் விலை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் சற்றே உயர்ந்திருப்பது நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.11,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.92,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 குறைந்து ரூ.12,546 ஆகவும், சவரன் விலை ரூ.344 குறைந்து ரூ.1,00,368 ஆகவும் விற்பனை ஆனது.
கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கம் விலை ரூ.4,000 அளவுக்கு குறைந்த நிலையில், இப்போதும் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் கடும் சரிவு தொடர்கிறது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாரளமாக தங்க நகை வாங்கலாம். எனினும், முதலீடு செய்யலாம் என எண்ணுவோர், தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (24.10.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.11,540 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.92,320 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 உயர்ந்து ரூ.12,589 ஆகவும், சவரன் விலை ரூ.344 உயர்ந்து ரூ.1,00,712 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (24.10.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.171 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 குறைந்து ரூ.1,71,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.87.71 ஆக உள்ளது. அதேவேளையில், பங்குச் சந்தை மீண்டும் ஆட்டம் காண்பதால், தங்கம் மீதான முதலீடு சற்றே உயரத் தொடங்கியிருக்கிறது. இதனால், ஆபரணத் தங்கமும் விலை உயர ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,540 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,320 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,589 (ரூ.43 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,00,712 (ரூ.344 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,540 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.92,320 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,589 (ரூ.43 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,00,712 (ரூ.344 உயர்வு)
Edited by Induja Raghunathan

