Gold Rate Chennai: தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக நீடிப்பு!
ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3,040 சரிந்த நிலையில், இன்று ரூ.240 மட்டும் உயர்ந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக உள்ளது.
ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்து. எனினும், பெரிய அளவில் அதிகரிக்காதது, நகை வாங்க விழைவோருக்கு ஆறுதல் தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.380 குறைந்து ரூ.13,570 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.414 குறைந்து ரூ.14,804 ஆகவும், சவரன் விலை ரூ.3,312 குறைந்து ரூ.1,18,432 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3,040 சரிந்த நிலையில், இன்று ரூ.240 மட்டும் உயர்ந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (20.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.32 உயர்ந்து ரூ.14,836 ஆகவும், சவரன் விலை ரூ.256 உயர்ந்து ரூ.1,18,688 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (20.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,55,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.33 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,560 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,800 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,836 (ரூ.32 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,688 (ரூ.256 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,560 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,800 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,836 (ரூ.32 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,688 (ரூ.256 உயர்வு)
Edited by Induja Raghunathan

