Gold Rate Chennai: தங்கம் விலை ரூ.1,02,000+ ஆக உயர்வு - புதிய வரலாற்று உச்சம்!
தங்கம் விலை நேற்று இருமுறை உயர்ந்து ரூ.1 லட்சத்தை மீண்டும் எட்டிய நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்து வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆபரணத் தங்கம் சவரன் விலை 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக உயர்ந்து, புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் சரித்திர உச்சம் கண்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை இரு முறை தங்கம் விலையில் உயர்வு ஏற்பட்டது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.12,570 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,00,560 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.13,528 ஆகவும், சவரன் விலை ரூ.1,09,704 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை நேற்று இருமுறை உயர்ந்து ரூ.1 லட்சத்தை மீண்டும் எட்டிய நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்து வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (23.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.12,770 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.218 உயர்ந்து ரூ.13,931 ஆகவும், சவரன் விலை ரூ.1,744 உயர்ந்து ரூ.1,11,448 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (23.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.234 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.2,34,000 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.68 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன், சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,770 (ரூ.200 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,160 (ரூ.1,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,931 (ரூ.218 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,448 (ரூ.1,744 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,770 (ரூ.200 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,160 (ரூ.1,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,931 (ரூ.218 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,448 (ரூ.1,744 உயர்வு)
Edited by Induja Raghunathan

