Gold Rate Chennai: தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு - எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று ரூ.320 குறைந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரியத் தொடங்கியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,08,800 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,836 ஆகவும், சவரன் விலை ரூ.1,18,688 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று ரூ.320 குறைந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (23.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.13,560 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.1,08,480 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 குறைந்து ரூ.14,793 ஆகவும், சவரன் விலை ரூ.344 குறைந்து ரூ.1,18,344 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (23.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.61 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,560 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,480 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,793 (ரூ.43 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,344 (ரூ.344 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,560 (ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,480 (ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,793 (ரூ.43 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,344 (ரூ.344 குறைவு)
Edited by Induja Raghunathan

