Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.12,000 அதிகரிப்பு!
ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.1.03 லட்சத்தை நெருங்கியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே அடங்காத ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்தது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.12,830 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.13,997 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.1,11,976 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.1.03 லட்சத்தை நெருங்கியிருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (7.1.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.12,870 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 உயர்ந்து ரூ.14,040 ஆகவும், சவரன் விலை ரூ.344 உயர்ந்து ரூ.1,12,320 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (7.1.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.12 உயர்ந்து ரூ.283 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.91 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு சற்றே மீண்டு வந்தாலும் கூட, சர்வதேச அரசியல் பொருளாதாரச் சூழலால் பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இது, ஆபரணத் தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,870 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,960 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,040 (ரூ.43 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,320 (ரூ.344 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,870 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,960 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,040 (ரூ.43 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,320 (ரூ.344 உயர்வு)
Edited by Induja Raghunathan

