Gold Rate Chennai: மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்; வெள்ளியும் கிலோவுக்கு ரூ.11,000 அதிகரிப்பு!
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.99,200 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.11,000 அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலை அளித்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.180 குறைந்து ரூ.13,473 ஆகவும், சவரன் விலை ரூ.1,440 குறைந்து ரூ.1,07,784 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.99,200 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.11,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (17.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.12,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.99,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 உயர்ந்து ரூ.13,528 ஆகவும், சவரன் விலை ரூ.440 உயர்ந்து ரூ.1,08,224 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (17.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.11 உயர்ந்து ரூ.222 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.11,000 உயர்ந்து ரூ.2,22,000 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.30 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி காண்பது தொடருகிறது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,400 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,200 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,528 (ரூ.55 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,224 (ரூ.440 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,400 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,200 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,528 (ரூ.55 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,224 (ரூ.440 உயர்வு)
Edited by Induja Raghunathan

