Gold Rate Chennai: தொடரும் ஷாக்! ரூ.1.04 லட்சம் தொட்ட தங்கம் விலை - வெள்ளி கிலோ ரூ.20,000 உயர்வு!
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வெள்ளி விலையோ ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1.04 லட்சத்தை எட்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இது, நகை வாங்க விழைவோருக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.12,890 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.14,062 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.1,12,696 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வெள்ளி விலையோ ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (27.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.13,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.14,182 ஆகவும், சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.1,13,456 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.20 உயர்ந்து ரூ.274 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74,000 ஆகவும் உள்ளது. இது வரலாறு காணாத புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.81 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன், சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,000 (ரூ.110 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,000 (ரூ.880 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,182 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,456 (ரூ.960 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,000 (ரூ.110 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,04,000 (ரூ.880 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,182 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,456 (ரூ.960 உயர்வு)
Edited by Induja Raghunathan

