Gold Rate Chennai: மீளும் ரூபாய் மதிப்பு - சற்றே குறைந்தது தங்கம் விலை!
ரூபாய் மதிப்பு மீண்டு வருவதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் சவரன் விலை குறைந்து வருகிறது. தற்போது சவரன் விலை ரூ.1.02 லட்சம் ஆக சரிந்துள்ளது. வெள்ளி விலையும் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கடுமையாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் காலையில் ஏற்றமும், பிற்பகலில் இறக்கமும் இருந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.12,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,02,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.13,964 ஆகவும், சவரன் விலை ரூ.1,11,272 ஆகவும் விற்பனை ஆனது.
ரூபாய் மதிப்பு மீண்டு வருவதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் சவரன் விலை குறைந்து வருகிறது. தற்போது சவரன் விலை ரூ.1.02 லட்சம் ஆக சரிந்துள்ளது. வெள்ளி விலையும் வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (8.1.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.12,750 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,02,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.13,909 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,11,272 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (8.1.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.272 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,72,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.83 ஆக உள்ளது. தற்போது ரூபாய் மதிப்பு மீண்டு வருவதும், தங்கம் மீதான முதலீடு குறைந்து வருவதும் ஆபரண தங்கம் விலை குறைவில் எதிரொலிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,750 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,000 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,909 (ரூ.55 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,272 (ரூ.440 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,750 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,000 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,909 (ரூ.55 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,272 (ரூ.440 குறைவு)
Edited by Induja Raghunathan

