Gold Rate Chennai: மீண்டும் ரூ.1 லட்சம் நோக்கி தங்கம் விலை - வெள்ளியும் புதிய உச்சம்!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி கிலோ விலை ரூ.2,31,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை இன்று வெகுவாக உயர்ந்து மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது. அதேவேளையில், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.99,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.13,528 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.1,08,224 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி கிலோ விலை ரூ.2,31,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (22.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.12,480 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.99,840 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.13,615 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.1,08,920 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.231 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,31,000 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.63 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன், சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியதால், ஆபரணத் தங்கம் விலையும் மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,480 (ரூ.80 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,840 (ரூ.640 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,615 (ரூ.87 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,920 (ரூ.696 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,480 (ரூ.80 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,840 (ரூ.640 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,615 (ரூ.87 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,920 (ரூ.696 உயர்வு)
Edited by Induja Raghunathan

