Gold Rate Chennai: ரூ.1.14 லட்சத்தை தொட்டது தங்கம் விலை - தொடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.6,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.14,000-ஐ தாண்டி, சவரன் விலை ரூ.1.14 லட்சத்தை எட்டியுள்ளது. இதற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் முக்கிய காரணம்.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ரூ.1.14 லட்சத்தை தொட்டு உச்சம் கண்டிருப்பது எளிய - நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,21,312 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.6,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.14,000-ஐ தாண்டி, சவரன் விலை ரூ.1.14 லட்சத்தை எட்டியுள்ளது. இதற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் முக்கிய காரணம். தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (21.1.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.350 உயர்ந்து ரூ.14,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.382 உயர்ந்து ரூ.15,546 ஆகவும், சவரன் விலை ரூ.3,056 உயர்ந்து ரூ.1,24,368 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (21.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.340 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,40,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.35 ஆக உள்ளது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டிருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். அத்துடன், கிரீன்லாந்தை வசப்படுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி முன்னெடுப்புகளால் சர்வதேச அளவில் பொருளாதாரச் சூழலில் பதற்றம் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் இந்த உச்சத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,250 (ரூ.350 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,000 (ரூ.2,800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,546 (ரூ.382 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,368 (ரூ.3,056 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,250 (ரூ.350 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,000 (ரூ.2,800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,546 (ரூ.382 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,368 (ரூ.3,056 உயர்வு)
Edited by Induja Raghunathan

