Gold Rate Chennai: தொடரும் சந்தோஷம் - தங்கம் விலை மேலும் ரூ.1,680 சரிவு!
சென்னையில் கடந்த 3 தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,000 அளவில் சரிந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது.
ஆபரணத் தங்கம் விலை நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் அதிரடியாக ரூ.1,680 குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.210 குறைந்து ரூ.13,350 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,680 குறைந்து ரூ.1,06,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.229 குறைந்து ரூ.14,564 ஆகவும், சவரன் விலை ரூ.1,832 குறைந்து ரூ.1,16,512 ஆகவும் விற்பனை ஆனது.
சென்னையில் கடந்த 3 தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,000 அளவில் சரிந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (25.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.210 குறைந்து ரூ.13,140 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.229 குறைந்து ரூ.14,335 ஆகவும், சவரன் விலை ரூ.1,832 குறைந்து ரூ.1,14,680 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (25.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.230 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.35 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் உறுதியான, தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,140 (ரூ.210 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,120 (ரூ.1,680 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,335 (ரூ.229 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,680 (ரூ.1,832 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,140 (ரூ.210 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,120 (ரூ.1,680 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,335 (ரூ.229 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,680 (ரூ.1,832 குறைவு)
Edited by Induja Raghunathan

