Gold Rate Chennai: தொடரும் மகிழ்ச்சி... தங்கம் விலை மேலும் ரூ.480 குறைவு!
ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1,500-க்கு மேலாக குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.05 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
சென்னையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை வெகுவாக குறைந்தது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.155 குறைந்து ரூ.13,215 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.169 குறைந்து ரூ.14,416 ஆகவும், சவரன் விலை ரூ.1,352 குறைந்து ரூ.1,15,328 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1,500-க்கு மேலாக குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.05 லட்சமாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (29.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.13,155 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,05,240 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.14,351 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,14,808 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (29.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.75 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,155 (ரூ.60 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,240 (ரூ.480 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,351 (ரூ.65 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,808 (ரூ.520 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,155 (ரூ.60 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,240 (ரூ.480 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,351 (ரூ.65 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,808 (ரூ.520 குறைவு)
Edited by Induja Raghunathan

