Gold Rate Chennai: புயலுக்குப் பின் அமைதி - தங்கம் விலையில் மாற்றம் இல்லை!
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. சவரன் விலை ரூ.90,400 ஆக நீடிக்கிறது. சுப காரியங்களுக்கு தயக்கமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல் முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான்.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை மாற்றம் கண்டு, ஏற்றமும் இறக்கமுமாக உறுதியற்றத் தன்மையுடன் இருந்த நிலையில், இன்று எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது. ஆனால், மாலையில் ரூ.1,600-க்கு அதிகரித்து. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் விலையும் குறைந்து பின்னர் அதிகரித்தது.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. சவரன் விலை ரூ.90,400 ஆக நீடிக்கிறது. சுப காரியங்களுக்கு தயக்கமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல், முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான். என்றாலும், உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (31.10.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.11,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.90.400 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.12,328 ஆகவும், சவரன் விலை ரூ.98,624 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (31.10.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.165 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,65,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
தங்கம் விலை இனி?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.77 ஆக உள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பதும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒருநாள் உயர்வும், மறுநாள் குறைவுமாக உள்ளது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், தங்கம் விலையும் இனி கூடும் எனத் தெரிகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,300 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,400 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,328 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,624 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,300 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,400 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,328 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.98,624 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan

