Gold Rate Chennai: சைலன்ட் மோடுக்கு சென்ற தங்கம் விலை - காரணம் என்ன?
ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.2,500 அளவில் உயந்த நிலையில், இன்று மாற்றம் ஏதும் இல்லை. வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏதுமில்லை.
கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று மாற்றம் ஏதுமின்றி விற்பனையாவது, நகை வாங்க விழைவோருக்கு ஆறுதல் அளித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.14,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 உயர்ந்து ரூ.15,436 ஆகவும், சவரன் விலை ரூ.432 உயர்ந்து ரூ.1,23,488 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.2,500 அளவில் உயந்த நிலையில், இன்று மாற்றம் ஏதும் இல்லை. வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (8.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,13,200 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,436 ஆகவும், சவரன் விலை ரூ.1,23,488 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (8.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.275 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,75,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
தங்கம் விலையில் மாற்றம் இல்லாதது ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.54 ஆக உள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்குமாக உள்ளது. இந்த உறுதியற்ற தன்மையும் ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,150 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,200 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,436 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,488 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,150 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,200 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,436 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,488 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan

