Gold Rate Chennai: தங்கம் வாங்க சரியான வாய்ப்பு; சவரன் எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை கடந்த வாரத்தின் இறுதியில் குறைந்த அதே விலையுடன் இன்றும் நீடிப்பது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரத்தின் இறுதியில் குறைந்த அதே விலையுடன் இன்றும் நீடிப்பது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (17/04/2023)
கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. தற்போது இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் அதே விலை நீடித்து வருவது, தங்கம் வாங்க காத்திருப்போருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,650 ரூபாய்க்கும், சவரன் 45,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் 6,108 ரூபாய்க்கும், சவரன் 48 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைத்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை சரிந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,650 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,200 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,114 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,912 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,595 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,760 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,104 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,832 (மாற்றமில்லை)

