Gold Rate Chennai: இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை ரூ.840 குறைவு!
இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்துள்ள சூழலில், ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக சரிந்திருப்பது மக்களை சற்றே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எனினும், தங்கம் விலை ரூ.73,000-ஐ தாண்டியே உள்ளது.
புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.840 குறைந்துள்ளது இன்ப அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.9,305 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.74,400 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 குறைந்து ரூ.10,151 ஆகவும், சவரன் விலை ரூ.136 குறைந்து ரூ.81,208 ஆகவும் இருந்தது.
இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்துள்ள சூழலில், ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக சரிந்திருப்பது மக்களை சற்றே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எனினும், தங்கம் விலை ரூ.73,000-ஐ தாண்டியே உள்ளது. சுப காரியங்களுக்காக அவசியம் எனில் மட்டும் நகை வாங்கலாம். எதிர்கால நலன் கருதி தங்கத்தில் முதலீடு செய்ய விழைவோர், எந்த வகையில் தங்க முதலீட்டுத் திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட ஆலோசகர்களை நாடுவதே நல்லது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (17.6.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 குறைந்து ரூ.9,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.840 குறைந்து ரூ.73,600 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 குறைந்து ரூ.10,037 ஆகவும், சவரன் விலை ரூ.912 குறைந்து ரூ.80,296 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (17.6.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் பங்குச் சந்தை வர்த்தக நிலவரம் தடுமாற்றத்துடன் தான் காணப்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் இப்போது மென்மேலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் புதிய முடிவுகள் வெளியாகவுள்ளது. தற்போதைய நெருக்கடி சூழலில், வட்டி விகிதம் ஏதும் மாறாது என்றே வர்த்தகர்கள் நம்புகின்றனர். இதனால், முதலீட்டாளர்கள் நிதானம் காத்து வருவதால் தங்கம் விலையும் தற்போது சற்றே சரிந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,200 (ரூ.105 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,600 (ரூ.840 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,037 (ரூ.114 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.80,296 (ரூ.912 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,200 (ரூ.105 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.73,600 (ரூ.840 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,037 (ரூ.114 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.80,296 (ரூ.912 குறைவு)
Edited by Induja Raghunathan

