Gold Rate Chennai: தொடர்ந்து குறையும் தங்கம் விலை; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440 ஆக உள்ளது. சுப காரியங்களுக்கு தயக்கமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல் முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான்.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. இது, நகை வாங்க விழைவோருக்கு நன்மை பயக்கும் தகவலாக உள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.11,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.90,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.12,273 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.98,184 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440 ஆக உள்ளது. சுப காரியங்களுக்கு தயக்கமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல், முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான். என்றாலும், உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலை இன்றும் சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (5.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.11,180 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.89,440 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 குறைந்து ரூ.12,197 ஆகவும், சவரன் விலை ரூ.608 குறைந்து ரூ.97,576 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (5.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.163 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,63,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக உள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடும் சரிந்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,180 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,440 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,197 (ரூ.66 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.97,576 (ரூ.608 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,180 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,440 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,197 (ரூ.66 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.97,576 (ரூ.608 குறைவு)
Edited by Induja Raghunathan

