Gold Rate Chennai: வீக் எண்டில் ஷாக் கொடுத்த தங்கம் விலை - மீண்டும் ரூ.93,000-ஐ தாண்டியது!
கடந்த இரு தினங்களில் ரூ.1,100 அளவில் சரிந்திருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்துள்ளது. சவரன் விலை மீண்டும் ரூ.93,000-ஐ தாண்டியுள்ளது.
வாரம் முழுவதும் உயர்வு, சரிவுமாக இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வார இறுதியில் ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.11,460 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.91,680 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.12,502 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.1,00,016 ஆகவும் விற்பனை ஆனது.
கடந்த இரு தினங்களில் ரூ.1,100 அளவில் சரிந்திருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்துள்ளது. சவரன் விலை மீண்டும் ரூ.93,000-ஐ தாண்டியுள்ளது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (22.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.170 உயர்ந்து ரூ.11,630 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.186 உயர்ந்து ரூ.12,688 ஆகவும், சவரன் விலை ரூ.1,488 உயர்ந்து ரூ.1,01,504 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.172 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,72,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.64 ஆக உள்ளது. இத்துடன், பங்குச் சந்தை தடுமாற்றம் எதிரொலியாக, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்ந்து, ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,530 (ரூ.170 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.93,040 (ரூ.1,360 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,688 (ரூ.186 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,01,504 (ரூ.1,488 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,530 (ரூ.170 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.93,040 (ரூ.1,360 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,688 (ரூ.186 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,01,504 (ரூ.1,488 உயர்வு)
Edited by Induja Raghunathan

