Gold Rate Chennai: ரூபாய் மதிப்பு எதிரொலி - தங்கம் விலை ரூ.90,000-க்கு மேலாக நீடிப்பு!
ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,000-க்கு மேலாக நீடிக்கிறது. சுப காரியங்களுக்கு தயக்கமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல் முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான்.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கி இருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.11,310 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.90.480 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.12,338 ஆகவும், சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.98,704 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,000-க்கு மேலாக நீடிக்கிறது. சுப காரியங்களுக்கு தயக்கமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல் முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான். என்றாலும், உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று சற்றே அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (3.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.11,350 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.90,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 உயர்ந்து ரூ.12,382 ஆகவும், சவரன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.99,056 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (3.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.168 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.78 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பின் இந்த வீழ்ச்சியும் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,350 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,800 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,382 (ரூ.44 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,056 (ரூ.352 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,350 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.90,800 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,382 (ரூ.44 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,056 (ரூ.352 உயர்வு)
Edited by Induja Raghunathan

