Gold Rate Chennai: தங்கம் விலை ‘ஷாக்’ - சவரனுக்கு ரூ.1,600 உயர்வு!
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,600 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.17 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் அதிர்ச்சி தரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்தது.
சென்னையில் புதன்கிழமை காலையில் குறைந்த தங்கம் விலை பிற்பகலில் உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,15,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,709 ஆகவும், சவரன் விலை ரூ.1,25,672 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.1,600 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.17 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (20.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.14,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.218 உயர்ந்து ரூ.15,927 ஆகவும், சவரன் விலை ரூ.1,744 உயர்ந்து ரூ.1,27,416 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (20.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.61 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு உயர்வதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,600 (ரூ.200 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,800 (ரூ.1,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,927 (ரூ.218 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,416 (ரூ.1,744 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,600 (ரூ.200 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,800 (ரூ.1,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,927 (ரூ.218 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,416 (ரூ.1,744 உயர்வு)
Edited by Induja Raghunathan

