Gold Rate Chennai: தங்கத்தை விட ஜெட் வேகத்தில் வெள்ளி - கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு!
தங்கம் விலை இன்றும் சற்றே உயர்ந்து சவரன் ரூ.1,02,400-க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம். வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது.
ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையிலும், ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றும் சற்றே உயர்ந்தது நகை வாங்க விழைவோருக்கு கவலை தந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.12,770 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.218 உயர்ந்து ரூ.13,931 ஆகவும், சவரன் விலை ரூ.1,744 உயர்ந்து ரூ.1,11,448 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்றும் சற்றே உயர்ந்து சவரன் ரூ.1,02,400-க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருவதும் முக்கியக் காரணம். வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (24.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.12,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.13,964 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,11,712 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (24.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.244 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.2,44,000 ஆகவும் உள்ளது. இது வரலாறு காணாத புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.81 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன், சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,800 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,400 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,964 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,712 (ரூ.264 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,800 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,02,400 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,964 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,712 (ரூ.264 உயர்வு)
Edited by Induja Raghunathan

