Gold Rate Chennai: சரிவுக்குப் பின் ரூ.600 உயர்ந்த தங்கம் விலை!
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.600 உயர்ந்துள்ளது. எனினும், சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாகவே உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
கடந்த இரு தினங்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஓரளவு உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கம் தந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.13,155 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,05,240 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.14,351 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,14,808 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.600 உயர்ந்துள்ளது. எனினும், சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாகவே உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (30.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.14,433 ஆகவும், சவரன் விலை ரூ.656 உயர்ந்து ரூ.1,15,464 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (30.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.61 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,230 (ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,840 (ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,433 (ரூ.82 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,464 (ரூ.656 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,230 (ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,840 (ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,433 (ரூ.82 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,464 (ரூ.656 உயர்வு)
Edited by Induja Raghunathan

