Gold Rate Chennai: தங்கம் விலை இன்று சற்றே உயர்வு!
சென்னையில் இன்று, சனிக்கிழமை (25.05.2024) ஆபரணத் தங்கம், மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே உயர்ந்துள்ளன.
சென்னையில் இன்று, சனிக்கிழமை (25.05.2024) ஆபரணத் தங்கம், மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் சவரன் விலை நேற்று 800 ரூபாய் குறைந்து ரூ.53 ஆயிரத்திற்கு அருகில் இருந்த நிலையில், தற்போது சற்றே விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் சனிக்கிழமை (25.05.2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 அதிகமாகி 6,655 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 அதிகரித்து 7,260 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து ரூ.53,240 ஆக உள்ளது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை 50 ரூபாய் அதிகமாகி ரூ.66,550 என்றும் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் 50 ரூபாய் அதிகரித்து ரூ.72,600-க்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை 40 ரூபாய் அதிகரித்து ரூ.58,080-க்கும் விற்பனையாகின்றன.
அதே போல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து உயர்ந்து ரூ.96 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.96,000 என்றும் உள்ளது.
தங்கம் விலை லேசாக உயர்வுக்குக் காரணம்:
மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் கோல்டு பியூச்சர்ஸ் வர்த்தகம் சற்றே உயர்வு கண்டதாலும் ஆபரணத் தங்கத்திற்கான தேவை சற்றே அதிகரித்ததாலும் விலை சற்றே உயர்வு கண்டது.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,655(மாற்றம் ரூ.5அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,240 (மாற்றம் ரூ.40அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,260 (மாற்றம் ரூ5அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,080 (மாற்றம் ரூ.40அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,640(மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,120 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,244(மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,952(மாற்றமில்லை)