Gold Rate Chennai: தை பிறந்தும் தங்கத்துக்கு வழி பிறக்கவில்லை - நடுங்க வைக்கும் தங்கம் விலை!
கடந்த வாரத்தைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தினந்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைவாங்க காத்திருப்போரும், நடுத்தர மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த வாரத்தைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தினந்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைவாங்க காத்திருப்போரும், நடுத்தர மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கம் விலை நிலவரம் (16/01/2023)
கடந்த வாரத்தைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தினந்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைவாங்க காத்திருப்போரும், நடுத்தர மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,658 ரூபாய்க்கும், சவரன் 42,368 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து 5,317 ரூபாயாகவும், சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 42,536 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 21 ரூபாய் அதிகரித்து 5,679 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 42,536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 80 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 80 காசுகளும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 800 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
டாலர் குறியீட்டு எண்ணின் மதிப்பு சரிந்ததும், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் பெரிதாக உயர்த்தப்பட வாய்ப்பில்லாததும் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருகிறது. இதனால் உலகளாவிய சந்தைகளில், ஸ்பாட் தங்கம் 0.3% உயர்ந்து கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக $1,926.07 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,317 (மாற்றம்: ரூ.21 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,536 (மாற்றம்: ரூ.168 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,679 (மாற்றம்: ரூ.21 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,432 (மாற்றம்: ரூ.168 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,220 (மாற்றம்: ரூ.19 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.41,760 (மாற்றம்: ரூ.152 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,695 (மாற்றம்: ரூ. 21 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,560 (மாற்றம்: ரூ.168 அதிகரிப்பு)