Gold Rate Chennai: ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
இன்று மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (29/11/2023):
நேற்று எவ்வித மாற்றமும் இன்றி நல்ல பிள்ளை போல் அமைதியாக இருந்த தங்கம் விலை, இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமிற்கு 90 ரூபாய் உயர்ந்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,780 ரூபாய்க்கும், சவரன் 45,240 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 90 ரூபாய் உயர்ந்து 5,870 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 46,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 90 ரூபாய் உயர்ந்து 6,340 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 50,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 70 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து 82 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
கார்த்திகை மாதத்தில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், தங்கம் அதிகமாக வாங்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததையடுத்து விலையும் உயர ஆரம்பித்துள்ளது.
மற்றொருபுறம் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் நிறுத்தி வைப்பும், டாலரின் மதிப்பு சரிவும் தங்கத்தின் மீதான முதலீடுகள் உயர காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,870 (மாற்றம்: ரூ.90 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.46,960 (மாற்றம்: ரூ.720 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,340 (மாற்றம்: ரூ.90 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,720 (மாற்றம்: ரூ.720 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,810 (மாற்றம்: ரூ.75 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.46,480 (மாற்றம்: ரூ.600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,338 (மாற்றம்: ரூ.82 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,704 (மாற்றம்: ரூ.656 உயர்வு)

