Gold Rate Chennai: மறுபடியும் முதல்லா இருந்தா? மெல்ல, மெல்ல உயரும் தங்கம் விலை!
இன்று மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (20/11/2023):
கடந்த வாரம் சில நாட்களாக சரிந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,700 ரூபாய்க்கும், சவரன் 45,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து 5,705 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 45,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து 6,175 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 49,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து 3வது நாளாக வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 79 ரூபாய்க்கும், கிலோ 79 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
கார்த்திகை மாதத்தில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், தங்கம் அதிகமாக வாங்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததையடுத்து விலையும் உயர ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,705 (மாற்றம்: ரூ.5 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,640 (மாற்றம்: ரூ.40 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,175 (மாற்றம்: ரூ.5 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,400 (மாற்றம்: ரூ.40 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,650 (மாற்றம்: ரூ.5 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,200 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,164 (மாற்றம்: ரூ.5 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,312 (மாற்றம்: ரூ.40 குறைவு)