Google Gemini 3 Flash: வேகமும், குறைந்த செலவும் கொண்ட புதிய ஏஐ மாடல்!
இந்த புதிய மாடல், ஜெமினய் ஆப், தேடலில் உள்ள AI Mode உள்ளிட்ட கூகுள் தயாரிப்புகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், டெவலப்பர்களுக்காக Gemini API, Google AI Studio மற்றும் Vertex AI வழியாகவும் இது வழங்கப்படுகிறது.
கூகுள், தனது ஜெமினி 3 குடும்பத்தில் புதிய உறுப்பினராக ‘ஜெமினி 3 ஃபிளாஷ்’ (Gemini 3 Flash) என்ற ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதிக வேகம், குறைந்த செலவு மற்றும் மேம்பட்ட பகுத்தறிவு திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மாடலாகும், என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாடல், ஜெமினி ஆப், தேடலில் உள்ள AI Mode உள்ளிட்ட கூகுள் தயாரிப்புகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், டெவலப்பர்களுக்காக Gemini API, Google AI Studio மற்றும் Vertex AI வழியாகவும் இது வழங்கப்படுகிறது.
கூகுளின் தகவலின்படி, ஜெமினி 3 ஃபிளாஷ் “frontier-level reasoning” எனப்படும் உயர்தர பகுத்தறிவு திறனை வழங்குவதோடு, குறைந்த தாமதம் (low latency) மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றையும் பேணுகிறது. பல கல்வி மற்றும் அறிவுத் தேர்வுகளில், இந்த மாடல் ஜெமினி 3 புரோ (Pro) மாடலை ஒத்த அல்லது அதற்கு நிகரான செயல்திறனை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், முந்தைய ஜெமினி 2.5 மாடல்களை விட பல சோதனைகளில் சிறந்த முடிவுகளை பெற்றுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
சவாலான ஏஐ அளவுகோள்களில் (benchmarks) ஜெமினய் 3 ஃபிளாஷ் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. GPQA Diamond தேர்வில் 90.4% மற்றும் Humanity’s Last Exam தேர்வில் (கருவிகள் இன்றி) 33.7% என்ற மதிப்பெண்கள் பதிவாகியுள்ளன. மேலும், தினசரி பயன்பாடுகளில் குறைந்த டோக்கன்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வேகத்துக்கும் ஆழமான சிந்தனைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த “thinking time” ஐ கட்டுப்படுத்தும் திறன் இதில் உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதனை புரிந்துகொள்ள, 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஜெமினி 2.5 மாடலை நினைவுகூரலாம். அப்போது, மேம்பட்ட பகுத்தறிவு, உயர் தர குறியேற்றத் திறன் மற்றும் மிகப் பெரிய context window ஆகியவற்றுடன் கூடிய மிக புத்திசாலியான தலைமுறை, என கூகுள் அதை அறிமுகப்படுத்தியது.
ஜெமினி 2.5 புரோ கடினமான பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டு, பல பொது தரவரிசைப் பட்டியல்களில் (leaderboards) முன்னணியில் இருந்தது.
இந்நிலையில், ஜெமினி 3 ஃபிளாஷ் என்பது ஒரு நடைமுறை மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஜெமினி 3 புரோவின் பல பகுத்தறிவு முன்னேற்றங்களை தக்கவைத்துக்கொண்டு, 2.5 மாடலை விட குறைந்த தாமதமும் குறைந்த செயல்பாட்டு செலவும் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெமினி 3 ஃபிளாஷ் மட்டும் தனித்துவமான ஒன்றல்ல. உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்கள் அனைத்தும் தற்போது பல அடுக்கு மாடல் (multi-tier model) அணுகுமுறையை பின்பற்றி வருகின்றன. வேகம், செலவு மற்றும் திறன் ஆகியவற்றின் இடையே சமநிலை ஏற்படுத்தும் வகையில் மாடல்கள் வடிவமைக்கப்படுகின்றன.
சமீபத்தில், OpenAI நிறுவனம் தொழில்முறை அறிவுப் பணிகளுக்கான புதிய GPT தொடர்களை அறிமுகப்படுத்தியது. கடும் போட்டி சூழலில் OpenAI தொடர்ந்து வேகமாக புதிய மாடல்களை வெளியிடுகிறது, என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோல், Anthropic உள்ளிட்ட நிறுவனங்களும் கோடிங் மற்றும் agentic பணிகளுக்கான வேகமான, சிறப்பு மாடல்களை புதுப்பித்து வருகின்றன.
டெவலப்பர்களுக்காக, ஜெமினி 3 ஃபிளாஷ் பல நடைமுறை பயன்களை வழங்குகிறது, என கூகுள் கூறுகிறது. Agentic coding workflows, real-time multimodal பயன்பாடுகள் மற்றும் அதிக அளவில் நடைபெறும் interactive systems ஆகியவற்றுக்கு இது மிகவும் பொருத்தமானது. குறைந்த தாமதத்துடன் வேகமாக பகுத்தறியும் திறன் இதன் முக்கிய பலமாகும்.
மேலும், JetBrains, Bridgewater Associates, Figma போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்த மாடலை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது உற்பத்தி சூழல்களில் (production systems) பயன்படுத்த ஏற்றதாக இருப்பதற்கான சான்றாக முன்வைக்கப்படுகிறது.
முன்னணி ஏஐ நிறுவனங்களின் தொடர்ச்சியான புதிய வெளியீடுகள், சந்தையில் போட்டியை மேலும் தீவிரமாக்கி வருகின்றன. அதே நேரத்தில், தவறான வெளியீடுகள், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் ஏஐ அமைப்புகளை இயக்க தேவையான ஆற்றல் செலவு போன்ற விஷயங்களும் அதிக கவனத்தை பெறுகின்றன.
வேகம் மற்றும் செலவை தியாகம் செய்யாமல் தரத்தை உயர்த்தும் முயற்சியாக ஜெமினி 3 ஃபிளாஷை கூகுள் விளக்குகிறது. ஆனால், இதன் உண்மையான தாக்கம் சுயாதீன சோதனைகள் மற்றும் பெரிய அளவிலான நடைமுறை பயன்பாட்டின் மூலம் தான் தெளிவாகும்.
மொத்தத்தில், ஜெமிni 3 ஃபிளாஷ் மூலம், “வேகமும் குறைந்த செலவும்” மற்றும் “ஆழமான சிந்தனை” என்ற இரு தேர்வுகளுக்கு இடையில் பயனர்கள் தேர்வு செய்யும் ஒரு முதிர்ந்த multi-model யோசனையை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் உடனடி விளைவு டெவலப்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகள் கிடைப்பதாகும். நீண்ட காலத்தில், திறன், வேகம் மற்றும் செலவு ஆகியவற்றின் நுட்பமான சமநிலையை பிடிக்க முன்னணி நிறுவனங்களுக்கிடையிலான போட்டி இன்னும் கடுமையாகும் என்பதே பெரிய விளைவாக பார்க்கப்படுகிறது.
