தமிழ்நாட்டின் முதல் Anthropic Claude Innovation Lab - ஓசூரில் உள்ள GWC Data.AI வளாகத்தில் துவக்கம்!
ஆந்த்ரோபிக்கின் கிளாடு தளத்தில் நிறுவன அளவிலான ஏஜெண்டிக் ஏஐ தீர்வுகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முதல் தனிச் சிறப்பு மையத்தை, ஆந்த்ரோபிக் நிறுவன இந்தியத் தலைமை இயக்குநர் இரினா கோஷ் உடன் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.
Anthropic-இன் Claude தளத்தில் நிறுவன அளவிலான ஏஜெண்டிக் ஏஐ தீர்வுகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முதல் தனிச் சிறப்பு மையத்தை, ஓசூரில் உள்ள GWC Data.AI வளாகத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இந்தியத் தலைமை இயக்குநர் இரினா கோஷ் மற்றும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தனர்.
இவ்வகையில் மாநிலத்தில் அமைக்கப்படும் முதல் தனிச் சிறப்பு மையம் இதுவாகும்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாடு மாதிரிகளைப் பயன்படுத்தி, சேவைத் தானியக்கம் (service automation), தரவுப் பகுப்பாய்வு (data intelligence) மற்றும் பணிச்சூழல் நவீனமயமாக்கல் (workflow modernization) உள்ளிட்ட துறைகளில் agentic AI தீர்வுகளை முன்மாதிரியாக உருவாக்கவும், கட்டமைக்கவும், செயல்படுத்தவும் தேவையான செயற்சூழலை இந்த 'கிளாடு இன்னவேஷன் லேப்' (Claude Innovation Lab) நிறுவனங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் வழங்க இருக்கிறது.

மேலும், கிளாடு தொடர்பான திறன் மேம்பாட்டு அமர்வுகளும், வாடிக்கையாளர் மற்றும் கூட்டாளர் பொறியியல் குழுக்களுடன் இணைந்த கூட்டுப் புதுமை முயற்சிகளும் இங்கு நடத்தப்படும்.
“ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கிளாடு சான்றிதழ் பார்ட்னர் என்ற முறையில், கிளாடை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதைச் சுற்றி திறனை உருவாக்குவதும் எங்கள் பொறுப்பாகும். ஆந்த்ரோபிக் கிளாடை ஒரு துணைக் கருவியாகக் கொண்டு, திறன் மேம்பாடு மற்றும் கூட்டுப் புதுமை ஆகிய இரண்டையும் ஒரே மையத்திற்குள் இந்த லேப் கொண்டு வருகிறது. இங்குள்ள குழுக்கள் நிகழ்நேர அடிப்படையில் புதுமையாக்கம் உருவாக்கி, முக்கிய வணிகச் சவால்களுக்கான தீர்வுகளை Claude மூலம் பல்வேறு துறை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்,” என GWC Data.AI நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நவீன் குமார், கூறினார்.
Edited by Induja Raghunathan

