பிக்பாஸ்கெட் சி.இ.ஓ பதவியில் இருந்து ஹரி மேனன் விலகல் - புதிய சி.இ.ஓவாக அமீத் நந்தா பொறுப்பேற்பு!
ஹரி மேனன் தினசரி பொறுப்புகளில் இருந்து விலகினாலும், அவரும் இன்னொரு இணை நிறுவனர் விபுல் பிரகாஷும் இயக்குனர் குழுமத்தில் தொடர்வார்கள் மற்றும் நிறுவன தலைமை குழுவை வழிநடத்துவார்கள்.
டாடா குழுமத்தின் ஆதரவு பெற்ற ஆன்லைன் மளிகை மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனம் பிக்பாஸ்கெட்டின் இணை நிறுவனர் ஹரி மேனன், அதன் சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது இடத்தில், அமேசான் இந்தியா முன்னாள் செயல் அதிகாரி அமீத் நந்தா புதிதாக பொறுப்பேற்கிறார்.
இந்தியாவின் ஆன்லைன் மளிகை துறையின் முன்னோடியாக திகழும் நிறுவனத்தில் இந்த தலைமை மாற்றம் முக்கிய நிகழ்வாக அமைகிறது.
ஹரி மேனன் தினசரி பொறுப்புகளில் இருந்து விலகினாலும், அவரும் இன்னொரு இணை நிறுவனர் விபுல் பிரகாஷும் இயக்குனர் குழுமத்தில் தொடர்வார்கள் மற்றும் நிறுவன தலைமை குழுவை வழிநடத்துவார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அமீத் நந்தா, அமேசான் இந்தியாவில் பல்வேறு மூத்த பொறுப்புகளில் பத்தாண்டு காலம் பணியாற்றியிருக்கிறார். இப்போது பிக்பாஸ்கெட் சி.இ.ஓவாக போட்டி மிக்க குவிக் காமர்ஸ் சந்தையை நிறுவனத்தை வழிநடத்துவார்.
இந்தியாவின் ஆன்லைன் மளிகை மற்றும் குவிக் காமர்ஸ் துறை, நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால அளவில் டெலிவரி வழங்க போட்டியிடும் நிலையில், வேகமாக மாறி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ்கெட் நிறுவனம் தனது நிலையை வலுவாக்கமும், மேலும் விரிவாக்கம் நாடியும் நந்தாவின் அனுபவத்தை நாடியுள்ளது.
நந்தா அமேசான் இந்தியாவில் அண்மை காலத்தில் விற்பனை பங்குதாரர்கள் சேவை பிரிவை வழி நடத்தினார். அமேசான் இந்தியா நிறுவனத்தில் சந்தை செயல்பாடுகள், பிராடக்ட் வளர்ச்சி, தொழில்நுட்பம், தனி லேபிள்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பொறுப்பு வகித்துள்ளார். இதற்கு முன், இந்துஸ்தான் லீவர் மற்றும் சிட்டிபாங்கில் பணியாற்றியுள்ளார்.
“பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் இணைந்து, இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மத்தியில் அது பெற்றிருக்கும் நம்பிக்கை அடித்தளத்தை வளர்த்தெடுப்பதில் உற்சாகம் அடைகிறேன். நிறுவனத்தின் வாடிக்கையாளர் முதன்மை அணுகுமுறை மற்றும் டாடா குழுமத்தின் பாரம்பரியம் ஆகியவை இணைந்து எதிர்காலத்திற்கான வலுவான அடிப்படையாகிறது,” என அமீத் நந்தா கூறியுள்ளார்.
2011ல் துவக்கப்பட்ட பிக்பாஸ்கெட் இந்தியாவில் ஆன்லைன் மளிகை சேவையை பிரபலாக்கி, பின்னர், 2021ல் டாடா குழுமம் பெரும்பான்மை பங்குகளை வாங்கிய நிலையில் டாடா டிஜிட்டலின் அங்கமானது. தற்போது நிறுவனம் 60 நகரங்களில் 25 மில்லின் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது. 900 டார்க் ஸ்டோர்கள் கொண்டுள்ளது.
“பிக்பாஸ்கெட்டை துவக்கம் முதல் தற்போது இந்தியாவின் முன்னணி நுகர்வோர் மேடையாக உருவாக்கிய நிலையில், அமீத் நந்தாவை சி.இ.ஓவாக வரவேற்பதில் உற்சாகம் கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் தொடர்பான அவரது ஆழமான புரிதல், வர்த்தகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்த அனுபவம், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் வர்த்தகத்தில் நீண்ட அனுபவம் ஆகியவை இந்த பயணத்தில் நிறுவனத்தை வழிநடத்தும் ஏற்ற இடத்தை அவருக்கு வழங்கியுள்ளது,” என இந்த மாற்றம் தொடர்பாக ஹரி மேனன் கூறியுள்ளார்.
வளர்ச்சி மற்றும் செயல்பாடு செயல்திறனை சமநிலையோடு கையாளக்கூடிய அனுபவசாலிகளை இந்தியாவின் டிஜிட்டல் வர்த்த நிறுவனங்கள் நாடத்துவங்கியுள்ளதை இந்த நியமனம் உணர்த்துகிறது. ஹரி மேனன், இயக்குனர் குழு உறுப்பினராக தொடரும் நிலையில், இத்துறையில் போட்டி அதிகரிக்கும் நிலையில் தொடர்ச்சி மற்றும் புதிய தலைமையை நிறுவனம் நாடுகிறது.
பெரிய அளவிலான வர்த்தகத்தை நிர்வகிக்கும் ஆற்றலும் அனுபவமும் அமீத் நந்தாவை இந்த பொறுப்பிற்கு ஏற்றவராக ஆக்கியுள்ளது, என்று டாடா டிஜிட்டல் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.சஜித் சிவானந்தன் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan

